பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

குருகுலப் போராட்டம்

மாறியவர்கள் மீண்டும் இந்துக்களாக விதியில்லை என்று கூறிவிட்டார்கள். வேங்கடேச ஐயர் நேரே காஞ்சிபுரம் சென்றார்.

காமகோடி பீடத்தின் தலைவராகிய அன்றைய சங்கராச்சாரியாரைச் சந்தித்தார். மதம் மாறியவர்களை மீண்டும் இந்து மதத்திலே சேர்த்துக் கொள்ள காமகோடி பீடம் அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார். சங்கராச்சாரியார் ஒப்புக் கொள்ள வில்லை. புனர் உபநயனம் செய்ய சாஸ்திரத்தில் இடமில்லை என்று மறுத்துவிட்டார்.

வேங்கடேச ஐயர் ஓய்ந்து விடவில்லை. தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார். சங்கராச்சாரி யாரைக் காட்டிலும் தீவிர இந்து மதப் பற்றாளரான வேங்கடேச ஐயரின் மகன் தான் சுப்பிரமணிய ஐயர்.

சுப்பிரமணிய ஐயர் வழக்கறிஞர் தொழிலுக்குப் படித்துத் தேர்ந்தார். ஆங்கிலேயர் ஒருவருக்குத் துணையாளராக இரங்கூன் சென்று, அங்கிருந்து, மேற்படிப்புக்கு இலண்டன் சென்றார்.

இலண்டனில் பாரிஸ்டர் படிப்புக்காகச் சென்ற சுப்பிரமணிய ஐயர், சைவ உணவுக்காக இந்தியா விடுதிக்குச் சென்று அங்குள்ள தீவிரவாதிகள் அணியில் சேர்ந்தார். தசராப் பண்டிகை விழாவுக்கு காந்தியடிகளைத் தலைமை தாங்க அழைத்த போது, கரந்தியடிகளைத் தீவிரவாதியாக மாற்ற முடியும்