பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்தா முனிவரும் ஈரோட்டண்ணலும்

29

என்று எண்ணிய சுப்பிரமணிய ஐயர், பிற்காலத்தில் காந்தியடிகளின் அஹிம்சை வழியே சிறந்த தென்ற முடிவுக்கு வந்தார். காந்தியடிகள்தான் அவரைத் தன் வழிக்கு மாற்றினார்.

சுப்பிரமணிய ஐயர் பாரிஸ்டர் ஆகவில்லை. அவருடைய இலட்சியமெல்லாம், புரட்சிக்காரராக மாற வேண்டும் என்பதே. காந்தியடிகளால் மன மாற்றம் பெற்ற பின் - அகிம்சாவாதியான பிறகு அவர் அமைதியாகத் தொண்டு புரியத் தொடங்கினார்.

ஐயர், வேதம் உபநிடதம் ஆகியவற்றில் நல்ல பயிற்சி பெற்றவர். திருக்குறளை ஐயம் திரிபறக் கற்றவர், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கம்பனின் கவித்திறம் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளும் நூலும் ஒப்பற்றன.

ஆங்கிலத்தில் கம்பராமாயண ஆராய்ச்சி நூல் எழுதியுள்ளார். இது மிகச் சிறந்த நூலாகும். பல மொழிகளில் பயிற்சி பெற்றவர்.

தம் இறுதிக் காலத்தில், பாரத கலாச்சாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ‘குருகுலம்’ ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடு பட்டார்.

காந்திய வாதியான ஐயர், தமிழகத்துச் சான்றோர்களிலே ஒருவராக மதிக்கப்பட்டார். சாதி