பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலாச்சாரத்தைக் காக்க ஒரு குருகுலம்

35

சேர்த்துக் கொள்ளப்பட்டது. புதிய மாணவர்கள் பலர் சேர்ந்தனர்.

குருகுலம் ஒரு இலட்சியப் பள்ளிக்கூடம். ஓர் இலட்சியவாதியான வ.வே.சு ஐயர் தலைமையில் இயங்குகிறது. எனவே தேசீய வாதிகள் பெரிய எதிர் பார்ப்புடன் தங்கள் பிள்ளைகளைக் குருகுலத்தில் கொண்டுவந்து சேர்த்தார்கள்.

ருருகுலத்தில் படிக்கும் மாணவர்கள் வருங்கால இந்தியாவின் இலட்சியத் தலைவர்களாகப் பரிமளிப்பார்கள் என்ற எண்ணம் நாடெங்கும் உள்ள தேசீய வாதிகளின் உள்ளங்களில் ஒரு புதிய கனவைத் தோற்றுவித்தது.

சாதிபேத மற்ற, சமத்துவ மனப்பான்மையுள்ள, ஒன்றுபட்ட குடிமக்களை உருவாக்கும் ஓர் அமைப்பு உருவாகி விட்டதென்ற களிப்பில் நாட்டுத் தலை வர்கள் இருந்தார்கள்.

வ.வே.சு.ஐயர் நாட்டுக் காங்கிரஸ் செயற் குழுவுக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பினார். தேசீயக் குருகுலத்துக்கு நிதி உதவி செய்யுமாறு அந்த விண்ணப்பம் கேட்டுக் கொண்டது.

அடுத்துக் கூடிய செயற்குழுவில் இவ் விண்ணப்பம் ஆலோசனைக்கு வைக்கப்பட்டது.

1925ஆம் ஆண்டு தமிழ் நாட்டுக் காங்கிரஸ் தலைவராக வரதராசுலு நாயுடு தேர்ந்தெடுக்கப்பட் டிருந்தார். அதற்கு முந்திய இரண்டு ஆண்டு தலைவ-