பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திட்டுண்ணா என்ன நயினா?

41

டிருந்தது. காய்கறிகள், பழ மரங்கள் வளர்க்கப் பட்டன. இவற்றில் எல்லாம் மாணவர்கள் ஈடு படுத்தப்பட்டார்கள்.

பள்ளிக் கூடத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்டும் வேலை நடக்கும். இதில் மாணவர்கள் கொத்தனார்களுக்கு செங்கல் எடுத்துப் போதல், சாந்து குழைத்தல் போன்ற வேலைகள் செய்வார்கள்.

மற்ற ஆங்கிலப் பள்ளிக் கூடங்கள் போலவே, வரலாறு, சமூகநலம், பூகோளம், விஞ்ஞானம் எல்லாப் பாடங்களும் சொல்லித் தரப்பட்டன. தமிழும், சமஸ்கிருதமும், இந்தியும் கற்றுத்தரப்பட்டன. பயிற்சி மொழியாக ஆங்கிலமே இருந்தது. இந்த விவரங்களை யெல்லாம் கேட்ட போது ரெட்டியாருக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. பிள்ளைகள் வேற்றுமையின்றி எல்லா வேலையும் செய்வது எளிமையான வாழ்வுக்கு வழி வகுப்பதாகும் என்று மகிழ்ச்சி யடைந்தார்.

ஆங்கிலம்தான் பயிற்சி மொழி என்று மகன் சொன்னபோது தேசிய உணர்வுள்ள ரெட்டியார் துடித்துப் போனார். ஆனால், கால நிலையை ஒட்டி, வேறு அரசு பள்ளி மாணவர்களோடு போட்டி வரும் போது சரி சமமாக நிற்க உதவியாயிருக்கும் என்று தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டார். இந்தி தேசிய மொழி அதைக் கற்றுக் கொள்வது நல்லது என்று எண்ணினார். சமஸ்கிருதம் இலக்கிய மொழி

கு-3