பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

குருகுலப் போராட்டம்

அதுவும் தேவை தான் என்று எண்ணினார். இந்தப் படிப்புகளில் பாரதக் கலாச்சாரம் எங்கே யிருக்கிறது, மற்ற பள்ளிக்கூடங்கள் போலத்தானே இருக்கிறது என்று எண்ணமிட்டார்.

‘சாப்பாடு நன்றாய் இருக்கிறதா?’ என்று தந்தையார் கேட்க, மகன், ‘பழகிக் கொண்டு விட்டேன்’ என்று சொன்னான்.

“பள்ளிக்கூடம் எப்போது திறக்கிறார்கள்?” என்று தந்தையார் கேட்டபோது, “நயினா, நான் அங்கே போகவில்லை; வேறு பள்ளிக்கூடத்தில் படிக்கிறேன்!” என்றான்.

எல்லாம் நன்றாகத் தானே சொன்னான். ஏன் போகமாட்டேன் என்கிறான். தாய்ப் பாசமா? வீட்டு நினைப்பா? என்று எண்ணினார் ரெட்டியார்.

“என்னடா, செப்புறே?” என்று கேட்டார்,

“எங்களை யெல்லாம் கேவலமா நடத்துறாங்க நயினா!” என்றான் பையன்.

“உழவு வேலை செய்கிறது கேவலமா? கட்டட வேலை செய்வது கேவலமா? எல்லாத் தொழிலும் கற்றுக் கொள்ள வேண்டும்! தொழிலில் வேற்றுமை பார்க்கக் கூடாது” என்றார் ரெட்டியார்.

“அதைச் சொல்லவில்லை நயினா? நாங்கள் எல்லாம் சூத்திரப் பசங்களாம். பிராமணப் பசங்களுக்குத் தனியா சாப்பாடு போடுறாங்க. அவங்களுக்குச் சோமவாரம் சுக்கிரவாரம் கார்த்திகை இப்படி நாள்