பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திட்டுண்ணா என்ன நயினா?

43

கள்ளே வடை பாயாசத்தோடு சாப்பாடு, எங்களுக் கெல்லாம் எப்பொழுதும் ஒரே மாதிரி சோறும் சாம் பாரும்தான்.

“ஒருநாள் தண்ணிர் தாகமெடுத்தது. வழியில் இருந்த பானையில் மொண்டு குடித்தேன். அது பிராமணப் பசங்க பானையாம். நான் தொட்டதும் தீட்டாகிப் போச்சாம். அந்த வழியாக வந்த பிரமச்சாரி வாத்தியார், பாதித் தண்ணிர் குடித்துக் கொண்டிருக்கும் போதே என் கன்னத்தில் ஓங்கி அடித்துவிட்டார். சூத்திரப்பய உனக்கு என்ன கொழுப்பு என்று பொரிந்து தள்ளினார். தீட்டுன்னா என்ன நயினா?” என்று கேட்டான் பையன்.

“பிராமணப் பசங்கன்னா ஒசத்தியா நயினா? எங்களோட தோட்ட வேலைக் கெல்லாம் அவங்க வர்றதில்லை. சமையல் வேலையிலே மட்டும் தான் சேர்ந்துக்குவாங்க. அதிலேயும் பாத்திரம் கழுவுறது மட்டும் எங்க வேலை. ஒருநாள் நானும் சமையல் கத்துக்கட்டுமா என்று கேட்டேன். சூத்திரப் பசங்க சமைச்சா பிராமணப் பசங்க சாப்பிட மாட்டாங்களாம். அந்த சமையல் ஐயர் என்னை முறைத்துப் பார்த்தார். இதெல்லாம் எனக்குப் பிடிக்கலை நயினா.”

“அடிபட்ட அன்னிக்கே வீட்டுக்கு வந்துவிடத் துடித்தேன். ரயிலுக்குப் பணமில்லே. அதனாலே பொறுத்துக் கொண்டேன்.”