பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

குருகுலப் போராட்டம்

மலேயா, சிங்கப்பூர்வாழ் தமிழ் வணிகப் பெரு மக்களும், தாங்கள் வாக்களித்தபடி பணம் தருவதற்கில்லை என்று கூறிவிட்டனர்.

குருகுல நடைமுறைகளில் தலையிட காங்கிரசுக்கு உரிமை கிடையாது என்று ஐயர் தெரிவித்ததை யொட்டி, டாக்டர் வரதராசுலு நாயுடு, குருகுலத்திற்கு நன்கொடை யளித்த பெருமக்களின் கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.

நன்கொடையாளர் கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு ஒரு தீர்மானம் நிறைவேறியது.

“பார்ப்பனர்களுக்குத் தனிச் சாப்பாடு, மற்றவர்களுக்குத் தனிச் சாப்பாடு என்ற வேறுபாட்டைக் குருகுல நிர்வாகிகள் உடனடியாக நிறுத்தி, சமபந்தி உணவு அளிக்க முன்வரவேண்டும். அப்படியில்லா விட்டால், சத்தியாக்கிரகம் செய்து குருகுலம் கைப் பற்றப்படும்” என்று தீர்மானம் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தமிழ்த்தென்றல் திரு வி.க நடுநிலையான ஒரு கருத்தைத் தெரிவித்தார்.

குருகுலத்துக்கு நன்கொடை யளித்த இரண்டு பார்ப்பனர்களின் சிறுவர்களுக்கு தனியுணவு வசதி செய்வதாக வாக்களித்து நன்கொடை வாங்கியதாக ஐயர் கூறுகிறார். வாக்களித்துவிட்டபடியால் - இந்த ஆண்டு படிப்பு முடியும் வரை தனி யுணவு