பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

குருகுலப் போராட்டம்

கூட்டத்திற்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் டாக்டர் வரதராசுலு நாயுடு தலைமை யேற்றார். அவர் தமது தலைமை உரையில் குருகுலம் தொடர் பான அன்றைய நிலையை விளக்கிப் பேசினார்.

அது ஒரு தேசிய நிறுவனம் என்ற நிலையில் தான் தமிழ்நாடு காங்கிரஸ் பத்தாயிரம் ரூபாய் நன்கொடை யளித்தது. காங்கிரஸ் கொள்கைப்படி ஒரு பொது நிறுவனத்தில் சாதி வேற்றுமைகளையும், உயர்வு தாழ்வையும் வளர்க்கும் முறையில் எந்தச் செயலும் நிகழக் கூடாது. அந்நிறுவனத்தின் வளர்ச்சியில் அக்கரை கொண்டுதான் காங்கிரஸ் பத்தாயிரம் ரூபாய் கொடுக்கத் தீர்மானித்தது. அது தனிப்பட்டவருடைய நிறுவனம்; அதில் காங்கிரஸ் தலையிடக் கூடாது என்று கூறுவது பொருத்த மில்லை.

‘நன்கொடை கொடுத்த ஒவ்வொருவருக்கும் அதன் நடைமுறையில் அக்கறை யுண்டு. எனவே குருகுலத்தில் இனிமேல் சமபந்தி யுணவுதான் வழங்கப்பட வேண்டும் என்று நாம் தீர்மானிக்கிறோம்’ என்று கூறினார்.

வ.வே.சு ஐயர் அவ்வாறு வாக்குறுதி தந்திருந்தால் தீர்மானம் தேவையில்லையே என்று சிலர் கருத்துரைத்தார்கள். ஐயர் அப்படி வாக்குறுதி தர வில்லை என்றும், பத்திரிகைகளுக்கு அவர் கொடுத்துள்ள அறிக்கைகளின் மூலம் அவர் அதற்கு ஒப்புக்-