பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

குருகுலப் போராட்டம்

"ஆரியர்களின் வேதகால காலாச்சாரம் தான் நம்முடைய கலாச்சாரமா? அதற்கு முந்திய திராவிட கலாச்சாரத்தில், சாதிப் பிரிவினைக்கே இடமில்லையே! அந்த உயர்ந்த கலாச்சாரத்தைத் தான் நாம் பின்பற்ற வேண்டும்” என்று டாக்டர் வரதராசுலு நாயுடு கூறினார்.

மற்றொரு பார்ப்பன உறுப்பினர் பேசுகையில்: “அரசாங்கப் பள்ளிகள் நடத்தும் பல உணவு விடுதிகளில் வேறு வேறு இடங்களில் தான் உணவு பரிமாறப் படுகிறது. இன்னும், சில தனியார் பள்ளிகளிலும் அவ்வாறு தான் நடக்கிறது. ஐயர் நடத்தும் குருகுலத்தில் மட்டும் இதை நீங்கள் வற்புறுத்துவதன் உள் நோக்கம் என்ன?” என்று கேட்டார்.

“சாதிவேற்றுமை கூடாது என்றும், தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்றும் ஐயர் பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். அப்படிப்பட்டவர் இப்படிச் செய்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. செய்துவிட்ட தவறுக்கு உதாரணங்களை அடுக்குவதால் பயனில்லை. இனிமேல் சமபந்தி நடக்குமா நடக்காதா என்பது தான் பிரச்சினை” என்று நன்கொடையாளர்களில் ஒருவர் கேட்டார்.

“இங்குள்ள பல தலைவர்கள் சாதிவேற்றுமை கூடாதென்றும், இந்திய மக்கள் எல்லோரும் சமம் என்றும் பொதுக் கூட்டங்களிலே பேசியவர்கள், இன்றைக்கு, வேதம், சாஸ்திரம் என்று பேசுவது