பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

குருகுலப் போராட்டம்

"சேரமாதேவியில் உள்ள குருகுலம் போன்ற ஒரு நிறுவனத்தை உருவாக்குவது கடினம்.

“இப்போது அதுஉருவாகியுள்ளது. ஐயர் நல்ல கல்விமான். சிறந்த ஞானி. நாளாவட்டத்தில் அவரே சரிசெய்துவிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

“தனிப்பந்திமுறை என்பது எங்கும் நடைமுறையில் உள்ளது தான். பல கல்வி நிறுவனங்களிலும், கோயில்களிலும், பொது விழாக்களிலும் இப்போது தனிப்பந்தி முறைதான் உள்ளது. அப்படியிருக்க சேரமாதேவியில் மட்டும் சமபந்தி வேண்டும் என்று கேட்பது நியாயமாகாது.

ஐயர் குருகுலமே தன் வாழ்க்கை என்று அர்ப்பணித்துள்ளார். ஐயரை மனம் வருந்தச் செய்வது அழகல்ல’ என்று கூறினார்.

அவரை யடுத்து டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் பேசினார். “நான் ஐயரிடம் நெருங்கிய நட்புள்ளவன். அவருடைய தியாகம் பெரியது. உழைப்பு மிகப் பெரியது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமபந்தி நடைபெறுவதால் நாடு முன்னேறிவிடப் போவதில்லை. பள்ளிக்கூடத்துக்குப் போகிற பிள்ளைகள் நன்றாகப் படிக்கிறார்களா? என்று தான் பார்க்க வேண்டும். ஒன்றாகச் சாப்பிடா விட்டால் ஒன்றும் கேடு வரப் போவதில்லை. நான் அண்மையில் ஒரு சேரிக்கு நல்வாழ்வுப் பிரசாரத்துக்காகப் போனேன். பார்ப்பான் வந்ததால் சேரிக்குத்