பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காங்கிரஸ் செயற்குழுவில் கருத்துப் போராட்டம்

57

தோஷங் கழிப்பதற்காகப் பானைகளைப் போட்டு உடைத்தார்கள். பிராமணர்களோடு ஒன்றாக இருந்து உணவருந்த வேண்டும் என்று போராடுகிறவர்கள், பஞ்சமர்களோடு ஒன்றாக இருந்து சாப்பிடத் துணிவார்களா?” என்று பெரிதாகச் சாதித்துவிட்டது போலப் பேசினார்.

பஞ்சமர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் நீங்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட முறைதான் சமபந்தி விருந்து முறை என்பதை மறந்துவிட்டுப் பேசினார் ராஜன்.

தொடர்ந்து, “வ.வே.சு. ஐயர் சமபந்தி நடத்துவதாக யாருக்கும் வாக்குக் கொடுக்கவில்லை. யாரும் வாக்குறுதி வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கவும் இல்லை. இந்த நிலையில் அவரை சமபந்தி தான் நடத்த வேண்டுமென்று வற்புறுத்துவது சரியில்லை” என்று தெளிவாகப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டது போலப் பேசினார்.

ராஜனுக்குப் பிறகு திரு.வி. கலியாணசுந்தரனார் பேசினார்.

நானும் வ.வே.சு ஐயரும் நெருங்கிப் பழகியவர்கள்.

குருகுலம் எப்படி யெப்படி அமைய வேண்டும் என்று பல முறை என்னுடன் கலந்து ஆலோசித்துத்தான் ஐயர் குருகுலத்தை உருவாக்கினார். குருகுலத்-

கு-4