பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

துணையாகக் கொண்டு, இந்த விழிப்புணர்வை ஒடுக்கிவிட முயல்வதையும் நாம் காண்கிறோம்.

பெருவாரியான மக்களிடையே பூத்துள்ள இந்த உரிமை உணர்வை ஒடுக்க நினைப்பவர்கள், தகுதி திறமையென்றெல்லாம் பேசி, தகுதியோ திறமை யோ இல்லாதவர்கள் கையில் எவ்வாறு பொறுப்பை ஒப்படைப்பதென்று வாதிப்பார்கள்.

தகுதியும் திறமையும் உள்ள மேலாதிக்க சாதி யாரின் சதியினால்தான் நாடு பின்தங்கியுள்ள தென்பதை நாட்டுமக்கள் உணர்ந்துவிட்டார்கள்.

உலக முழுவதிலும் கருப்பு இனத்தவர்கள் அடிமைகளாக்கப்பட்டு ஆடுமாடுகளோடு சேர்த்து விற்கப்பட்ட காலமும் ஒன்று இருந்தது.

அமெரிக்க நாட்டின் தலைவராக இருந்த ஆபிரகாம்லிங்கள் என்ற அருளாளர், கருப்பு இனத் தவரின் அடிமைத்தனத்தை யொழித்து, அவர்கள் உரிமைக்குப் போரிட்டதும், வெற்றி பெற்றதும் உலக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக் கப்பட்ட செய்தியாகும்.

இன்று அமெரிக்க நாட்டின் பெருமைக்குப் பெரிதும் காரணமாக இருப்பவர்கள், ஒரு காலத்தில் அடிமைகளாக நடத்தப்பட்ட கருப்பர்களே!