பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தியடிகள் தடம் புரண்டார்

69

தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவரோ, நியாயத்தை நிலை நிறுத்தாமல் விடமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். டாக்டர் வரதராசுலு நாயுடு ஈரோட்டாரைப் போல எதையும் வெட்டொன்று துண்டிரண்டு என்ற போக்கில் பேசுபவர் அல்லர். ஆனால், இந்தப் பிரச்சினை காங்கிரசின் உயிர் நாடியான பிரச்சினை. சாதி வேற்றுமையை ஒழித்துக் கட்ட வேண்டுமென்ற கொள்கைப் பிரச்சினை, எனவே அவர் இதில் கடைசிவரை உறுதியாக நின்றார்.

பெரும்பாலான பிரச்சினைகளில் அவர் ஈரோட்டாருடன் ஒத்துப் போவதே இல்லை. ஆனால் இயக்கத்தின் உயிர்நாடியான பிரச்சினை மட்டுமல்லாமல், கோடான கோடி மக்களின் எதிர்கால வாழ்வைத் தீர்மானிக்கின்ற பிரச்சினையாகவும் இது இருந்ததால் இதில் அவர் எள்ளளவும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.

பார்ப்பனர்களோடு உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்பதோடு பிரச்சினை தீர்ந்துவிடவில்லை. மனிதருக்குள் ஏற்றத் தாழ்வு ஏற்படுத்தும் மோசமான கேட்டுக்கு முடிவுகட்ட வேண்டிய பொறுப்பில் அவர் இருந்ததால், இதில் யாருடைய சமாதானத்திற்கும் அவர் இணங்குவதாக இல்லை.

வ.வே.சு ஐயரோ, அவருக்குப் பின்னணியில் நின்ற ராஜாஜி, சந்தானம், ராஜன் சுவாமிநாதன், ஆலாஸ்யம் போன்ற பார்ப்பனத் தலைவர்களோ,