பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

குருகுலப் போராட்டம்

மான சீர்திருத்தம் தானா என்றுகூட என்னால் சொல்ல முடியாது. அதே சமயம், இந்த பேதத்தை முற்றிலும் தகர்த்தெறிய விருப்பம் பெருகுவதை நான் உணருகிறேன். சமபந்திப் பாகுபாட்டுக்கு ஆதரவாகவும் சரி, எதிராகவும் சரி நான் காரணங்கள் கூற முடியும். இதில் வேகம் கூட்டுவதற்காக நான் வலுக்கட்டாயத்தை உபயோகிக்க மாட்டேன். ஒருவர் இன்னொருவருடன் சேர்ந்து சாப்பிட மறுப்பது பாவம் எனக் கருதமாட்டேன்; சமபந்தி போஜனம் செய்வது பாவம் என்பதையும் ஏற்க மாட்டேன். ஆனால், பிறரது உணர்ச்சிகளை மதிக்காமல் தனிப் பந்தி முறையை மாற்ற முயலும் எல்லா முயற்சிகளையும் நான் உறுதியாக எதிர்ப்பேன். மாறாகப், பிறரது உணர்ச்சிகளைப் புறக்கணிக்காமல், அவர்களது உணர்ச்சிகளை மதித்து நடப்பேன்.”

நான் நாயுடுவையும் நாயக்கரையும் சமாதானப் படுத்துகிறேன். நீங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் சமபந்தி நடத்த ஒப்புக் கொள்கிறீர்களா என்று ஐயரைக் கேட்ட காந்தியடிகள் தான் இதை எழுதினாரா? நம்ப முடியவில்லை.

சந்தானமோ ராஜகோபாலாச்சாரியோ எழுதிக் கொடுத்ததை அப்படியே கையெழுத்திட்டு பத்திரிகையில் வெளியிட்டாரா என்றும் எண்ண வேண்டியிருக்கிறது.