பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தியடிகள் தடம் புரண்டார்

77


இப்படி யிருக்கையில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வருகிறது? வருணாசிரம தர்மமானது சமுதாய நலத்தை ரட்சிப்பதற்காகவே ஏற்பட்டது. மற்றபடி ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை ரட்சிப்பதற்கு ஏற்பட்டதல்ல.”

காந்தியடிகள் மைசூரில் பேசிய இந்தப் பேச்சு சிறிதாவது அறிவுக்கும் அனுபவத்துக்கும் பொருத்தமானதாக இருக்கிறதா? இதைக் காந்தியடிகள்தான் பேசினாரா?

தென்னாப்பிரிக்காவில் இன வெறிக் கொள்கையால் பாதிக்கப்பட்ட காந்தியடிகள், அப்படிப்பட்ட ஒரு வெறிக் கொள்கையால் இந்தியாவில் ஆதிதிராவிடர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்துதான் அரிசன இயக்கம் தொடங்கினார். தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டார். அப்படிப்பட்ட காந்தியடிகள், இந்த வருணாசிரம தருமத்தால் தீண்டாமையை ஒழிக்க முடியும் என்று எப்படி நினைக்க முடியும். அது முடிந்த செயலா?

ஒரு பஞ்சமன் தனக்கு விதிக்கப்பட்ட மலம் அள்ளும் தொழிலைச் சிறப்பாகச் செய்தால், அவனை உயர்ந்தவன் என்று பாராட்டி, இந்தப் பார்ப்பனர்கள் கொண்டாடுவார்களா?

ஒரு தாய் தன் பிள்ளைக்குச் செய்ய வேண்டிய கடமையை அவன் சமுதாயத்துக்குச் செய்கிறான் என்று பாராட்டுவார்களா? பாராட்டியிருக்கிறார்-