பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

குருகுலப் போராட்டம்

உதட்டளவிலே உச்சரித்து - மேடைகளிலே முழக்கி —அதற்காகவே உயிர் வாழ்வதாகக் கூறுவார்கள்.

அதை யாராவது ஒருவர் செயல் அளவில் நிறைவேற்றத் தொடங்கினால், அதனால் தங்கள் சாதி மேலாதிக்கம் வீழ்ந்துவிடும் நிலை ஏற்பட்டால், அவர்களை வீழ்த்துவதற்குப் பின்வாங்க மாட்டார்கள்.

அந்த உன்னதமான கொள்கைகளை நிறைவேற்றியே தீருவேன் என்று அந்தக் காந்தியே முனைந்தார் என்றால் அவரையும் விட்டுவைக்க மாட்டார்கள்.

காந்தியடிகளின் பிற்காலக் கொள்கைகள் எல்லாம் அவர்களுடைய கொள்கைகளாகவே - அவர்களுக்கு அனுசரணையான கொள்கைகளாகவே வெளிப்பட்டன.

இவற்றை யெல்லாம் பெரியார் நன்றாகத் தெரிந்து கொண்டார்.

சாதிவேற்றுமை கூடாது என்று சொல்லிக் கொண்டே அவர்கள் தங்கள் மேலாதிக்கத்தை வளர்த்துக் கொள்வார்கள்.

திறமைசாலிகளுக்கே முதலிடம் என்று சொல்லி எல்லா இடத்திலும் அவர்களே இருந்து கொள்வார்கள். மற்ற சாதிக்காரர்கள் திறமையடையாதபடி விழிப்பாக இருந்து பார்த்துக் கொள்வார்கள்.