பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூக நீதியே சமநீதி

85

என்று எல்லா வகுப்பாரும் இடம் பெறும்போது, எல்லா இனத்தவரும் முன்னேறும் நிலை ஏற்படும்.

கல்வி கற்பதிலும், இதே விழுக்காட்டில் ஒவ்வொரு சாதியாருக்கும் இடம் கிடைக்கும்.

பார்ப்பனர் தங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப 3 பேர் மட்டுமே இடம் பெறுவர்.

இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பார்ப்பனர்கள் திறமைசாலிகள் ஒதுக்கப்படலாமா? என்று கூக்குரல் இடத் தொடங்கிவிட்டார்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக திறமையடையாதபடி ஒதுக்கப்பட்ட இனத்தவர்கள் திறமை பெறவும், திறமை பெற்றவர்கள், பதவி பெறவும், பதவி பெற்றவர்கள் தங்கள் இனத்தாரை முன்னேற்றவுமான வாய்ப்புகள் சமூகநீதி முறையினால் எல்லாருக்கும் கிடைக்கின்றன. ஒழிக்க முடியாத சாதியை அடிப்படையாக வைத்தே ஒவ்வொரு சாதியும் முன்னேறி மேல் நிலைக்கு வருவதற்கு உரிய அருமையான வழிதான் வகுப்பு விழுக்காட்டுநீதி— சமூகநீதி!

பெரியார், நம்முடைய முன்னோர்களைப் போலவே சாதிக் கொடுமையை அனுபவித்தவர். பார்ப்பனர்களால் நம்முடைய முன்னோர்கள் ஒவ்வொருவரைப் போலவும் அவமானப்படுத்தப்பட்டவர். நம் முன்னோர்கள், இதை விதியென்று பொறுத்துக் கொண்டார்கள். பெரியாரால் பொறுத்துக் கொள்ள