பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

குருகுலப் போராட்டம்

முடியவில்லை — போராடினார். தனக்காக மட்டுமல்லாமல் நமக்காக - நம் ஒவ்வொரு சாதியாருக்காகவும் போராடினார்.

நாயக்கர்களுக்காக என்றல்ல, நாயுடுமாருக்கும், முதலியாருக்கும், நாடாருக்கும், தேவருக்கும், வேளாளருக்கும், குலாலருக்கும், பள்ளருக்கும், பறையருக்கும், கள்ளருக்கும், கவுண்டருக்கும், வண்ணாருக்கும், முடிமழிப்போருக்கும், சக்கிலியருக்கும், முத்தரையருக்கும், இன்னும் எத்தனையோ பேருக்கும் எண்ணிறந்த பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட அத்தனை பேருக்குமாக அவர் போராடினார்.

சாண் ஏறினால் முழம் வழுக்கும் என்பார்களே அதுபோல சமூகநீதிப் பிரச்சினை எத்தனை தோல்விகளைத் தழுவியுள்ளது என்று வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் குருதி கொப்பளிக்கும்!

தோற்றுத் தோற்று விழுந்த நம் தன்மான இயக்கத் தொண்டர்கள், திராவிடர் இயக்கத்தவர் தோல்வி கண்டு துவளாது - எதிர்ப்புக் கண்டு மலையாது - வீழ்ச்சிகண்டு சலியாது செய்த முயற்சியின் பயன் தான் இன்றைய வெற்றி! இது முழு வெற்றியல்ல, என்று இந்தியா முழுவதும் வகுப்பு விழுக்காட்டு வாய்ப்பு ஏற்படுகிறதோ அன்று தான் நாம் முழு வெற்றி அடைந்ததாகப் பொருள்!

இன்றும் பல துறைகளிலே பார்ப்பன ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. அவர்கள் மேல் நிலையில்