பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூக நீதியே சமநீதி

89

வேண்டும் என்று கருதினார். இதற்காக, வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று 1920ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட்டிலும் தீர்மானம் கொண்டு வந்தார்.

1920-ல் இந்தத் தீர்மானத்தைப் பெரியார் கொண்டுவந்தார். திருநெல்வேலி காங்கிரஸ் மாகாண மாநாடு எஸ்.சீனிவாச ஐயர் அவகள் தலைமையில் நடந்தது, தலைவர் இந்தத் தீர்மானத்தை அனுமதிக்க மறுத்து விட்டார்.

1921-ல் இராசகோபாலாச்சாரியார் தலைமை யில் தஞ்சாவூரில் நடந்த காங்கிரஸ் மாகாண மாநாட்டில் பெரியார் மீண்டும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். தலைவர் இந்தத் தீர்மானத்தைத் தந்திரமாகப் பேசித் தடுத்துவிட்டார்.

1922-ல் திருப்பூரில் காங்கிரஸ் மாகாண மாநாடு நடந்தது. அதன் தலைவர் விஜயராகவாச் சாரியார். அவர் அனுமதிக்க மறுத்துவிட்டார்.

1923-ல் தீர்மானம் மாநாட்டில் முன் மொழியப் பட்டது. ஆனால் எதிர்ப்பு ஏற்பட்டு அது கலவரமாக மாக மாறும் நிலையில் கைவிடப்பட்டது.

1924-ல் திருவண்ணாமலை காங்கிரஸ் மாநில மாநாடு பெரியார் தலைமையில் நடந்தது. அதில் தீர்மானத்தைக் கொண்டுவர முடிவு செய்திருந்தார் பெரியார். ஆனால், எஸ் சீனிவாச ஐயங்கார்,

கு. - 6