பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

குருகுலப் போராட்டம்

இந்தத் தீர்மானத்தை முன்மொழியவிடாமல் தடுப்பதற்காக ஏராளமான ஆட்களைக் கூட்டிக்கொண்டு வந்து கூச்சலிட்டுக் குழப்பம் செய்து முன்மொழிய, விடாமல் தடுத்துவிட்டார்.

1925-ன் தொடக்கத்தில்தான் குருகுலப் போராட்டம் நடந்தது. 1925 இறுதியில் நடந்த காஞ்சிபுரம் மாநாட்டிலும் தீர்மானம் கொண்டுவர முயன்றார் பெரியார்.

மாநாட்டுத் தலைவர் திரு.வி.க அவரும் தீர்மானத்தை முன்மொழிய அனுமதிக்கவில்லை.

காங்கிரசால் தமிழர்கள் முன்னேற வழியே யில்லை. இனி காங்கிரசை ஒழிப்பதே என் வேலை என்று கூறிய பெரியார், மாநாட்டிலிருந்து வெளியேறினார். காங்கிரசிலிருந்து முற்ற முழுக்க விலகி விட்டார்.

காங்கிரசில் உறுப்பினராக இருந்த பல தமிழன்பர்கள் பெரியாரைப் பின்பற்றிக் காங்கிரஸ் கட்சியி லிருந்து விலகி பெரியார் அணியில் சேர்ந்து கொண்டார்கள்

பெரியார் அன்று முதல் சமூகநீதியை நிலை நாட்டுவதற்காக தன்மான இயக்கத்தைத் தோற்று வித்து தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்கத் தொடங்கினார்.

அவருடைய உழைப்பின் பலன் இன்று கனியத் தொடங்கியிருக்கிறது.