பக்கம்:குறட்செல்வம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தேங்கும். அவ்வழி அழுக்காறு, அவா, வெகுளி போன்ற குணக்கேடுகள் தோன்றத் துணை செய்யும்.

அரும் செல்வமோ, எஞ்ஞான்றும் இன்பந் தருவது. உடையவருக்கும் இன்பம் தரும். மற்றோர்க்கும் இன்பம் தரும். அருட் செல்வத்தினால் - அரும் செல்வம் உடைமையினால் சான்றாண்மை வளரும்; புகழ் பெருகும். அருளுடையோர் நெஞ்சம் தண்ணென்றிருக்கும். அங்கு அன்பின் ஈரம், கருணையின் கசிவு, எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.

இத்தகு அருட்செல்வம், பொருட் செல்வத்தைப் போல எளிதில் கிடைக்கக் கூடியதன்றி, பலகாலும் முயன்று பெற வேண்டிய பெரும் பேறு. அன்பு நெறியில் பல்லாண்டொழுகியவர்களுக்கே அருள் உணர்வு அரும்பும். உல்கியலில் பொருள் உடையார் பலர். அருளுடைய்ார் அருமையினும் அருமை.

எனினும், வள்ளுவர் காலத்திலேயே ஒரு பொய்வாதம் தோன்றி இருந்திருக்கிறது. செல்வம் உடைமை புண்ணியத்தின் பயன் - அருளின் ஆக்கம் என்றெல்லாம் பிழைபடக் கருதி வந்திருக்கின்றனர். இதனை, திருவள்ளுவர் கடுமையான குரலில் மறுக்கிறார்.

பொருட்செல்வம் பூரியர் கண்ணும் உள’ என்று: இடித்துக் கூறுவதன் மூலம், மனிதனின் தகுதிப்பாட்டுக்கு, பொருள் உடைமையைத் திருவள்ளுவர் அளவுகோலாகக் கையாள விரும்பவில்லை. திருவள்ளுவர் மனிதகுலத்தை ஒன்றாக இணைத்து ஒருலகம் சமைப்பதையே இலட்சிய மாகக் கொண்டவர். . -

அத்தகைய இலட்சிய உலகத்தைப் படைப்பதற்கு : அன்பும் அருளுமே இன்றியமையாத் தேவை. அவையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/100&oldid=1276394" இலிருந்து மீள்விக்கப்பட்டது