பக்கம்:குறட்செல்வம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. பொருளைப் போற்று .

திருவள்ளுவர், வாழ்க்கைகளுக்கு அப்பாற்பட்டி கற்பனை உடையவரல்லர். அவருடைய சிந்தனைப் போக்கு வாழ்வியலை ஒட்டியே அமைந்திருந்தது. தைார்த்த உண்மைகளுக்கு அவர் மாறுபட்டவரல்லர்.

ஆதலால், மனித வாழ்க்கைக்கு மிகமிக இன்றியமை யாததாகிய பொருளைப் பற்றிய திருவள்ளுவரின் கருத்து இரண்டுபட்டதன்று. குழப்பமானதுமன்று: மிகமிகத் தேளிவானது, பொருளின் அடித்தளத்திலேயே தனிமனித னின் வாழ்க்கையையும். சமுதாயத்தின் வாழ்க்கையையும் காட்டுகின்றார், ஏன்? பழந்தமிழ் மரபும் அதுதான்ே!

மனிதன் அடையக்கூடிய பேறுகள், நான்கு என்பது தமிழ்மறை. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும். அவற்றில் நடுவனவாகிய பொருள் எய்த இருதலையும் எய்தும் என்பது தமிழ்நூல் முடிபு. .

அதனாறன்றோ திருவள்ளுர் அறம், பொருள், இன்பம் என்று முப்பால் நூல் செய்தார். விடுபற்றி அவர் தனி இயல் அமைக்கவில்லை. காரணம், அறம், பொருள், இன்பம் ஆகியவை மனிதன் முயன்று செய்யக் கூடியவை-பெறக் கூடியவை.

ஆனால் விடு, அறம்-பொருள்-இன்பத்தை முறை யாகச் செய்து அனுபவித்து வெற்றி பெற்றவர்களுக்கு இறைவனால் வழங்கப் பெறுவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/105&oldid=701855" இலிருந்து மீள்விக்கப்பட்டது