பக்கம்:குறட்செல்வம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸107

கிறார்கள். இன்றைய அறிஞர்களின் கருத்து இரண்டாயி ரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திருவள்ளுவரின் சிந்தனை!

ஆனாலும், துறவிகள் புலால் உண்ணக்கூடாது என்பது திருவள்ளுவரின் திட்டவட்டமான கருத்து. இன்றைய உலகியலில் உயிர்க்கொலையை அடியோடு எதிர்த்த புத்தரின் வழிவந்த பெளத்தத் துறவிகள் புலால் உண்ணலில் முதலிடம் வகிக்கிறார்கள். -

அருளொழுக்கத்தின் தாயகமாகிய தமிழகத்திற்கு அண்மையில் வந்திருந்த திபெத்தின் பெளத்த மதத் தலைவர் தலாய்லாமா அவர்கள் இனிமேல் புலால் உண்ப தில்லை என்று நோன்பெடுத்துள்ளார். W

துறவிகளின் வாழ்க்கைக் கடமை புறநிலைத் தொடர் புடையது மட்டுமன்று. உள்ளுணர்வு சார்புடையதுமாகும். சிறப்பாக அவர்கள் இதயத்தில் அருளுணர்வு இடம்பெற வேண்டும். -

அருள் என்பது யார் மாட்டும், எதன் மாட்டும் விருப்பு, வெறுப்புக்களின் கலவையில்லாத மாசற்ற பரிவும் பாசமும் காட்டுதலாகும். இத்தகு அருளுணர்வுடையோர் எங்ஙனம் கதறக்கதறக் கழுத்தையறுத்து இரத்தம் சொட்டச் சொட்டி இரக்கமின்றிப் புலாலை உண்பார்கள்? அப்படி உண்பவர் களை எங்ங்ணம் அருளாட்சியுடையோராகக் கருத முடியும்? என்று வினவுகின்றார் திருவள்ளுவர்.

துறவற உலகிற்கு அருளாட்சியும், இல்லற உலகிற்குப் பொருளாட்சியும் இன்றியமையாதன. இவ்விரு வேறு உலகமும் தமக்குரிய அருளாட்சியையும், பொருளாட்சியையும் போற்றுமாயின், பொருளால் அருள் வளரும்-அருளால் இன்பம் பெருகும்! – .

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருணாட்சி ஆங்கில்லை. ஊண்தின் பவர்க்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/109&oldid=1276411" இலிருந்து மீள்விக்கப்பட்டது