பக்கம்:குறட்செல்வம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. எது தவம்:

திருக்குறள் ஓர் ஒழுக்க நூல்-அற நூல். ஆயினும், விஞ்ஞானப் பார்வையில் தலைசிறந்து விளங்கும் நூல். திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறி அற நெறி. மனித இயல்புகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு நடைமுறைப் படுத்தக்கூடியவையாகவே கூறப்பெற்றிருப்பது எண்ணி, உணரத்தக்கது. . . . . . . .

வாழ்வியலுக்கு அப்பாற்பட்ட-நடைமுறை சாத்திய மற்ற ஒழுக்க நெறிகளைத் திருக்குறள் கூறவில்லை. வாழ்வாங்கு வாழ்தல்' என்பதையே திருக்குறள் சிறந்த அறமாகப் பாராட்டுகிறது. அங்ங்னம் வாழ்பவர்கள். தெய்வமெனப் போற்றப்படுவார்கள் என்றும் திருக்குறள் கூறுகிறது. .

வாழ்க்கை என்பது கடமை என்ற செயற்பாட்டுக் காகவே. சிறந்த சமய நெறியின்படியும் உயிர்கள் வாழ்க்கைக் களத்தில் கடமைகளைச் செய்வதன் மூலம் அறிவும் அனுபவமும் பெற்று முடிவில் துன்பச் சூழலினின்றும் விடுதலை பெறுகின்றன என்றே கூறுகின்றது. - * ... " : «

எனலா உயிர்களும் தமக்கு இயைபான களங்கள் அமைத்துக் கொள்ளுகின்றன. அத்தகு களங்களே இல்லறம் துறவறம் என்றமைகின்றன. இவை இரண்டும் கடமைகளின்பாற் பட்டனவே. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/110&oldid=701860" இலிருந்து மீள்விக்கப்பட்டது