பக்கம்:குறட்செல்வம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்109


இல்வாழ்வான் கடமைகள் சற்று தன்னலச் சார்பும், குடும்பச் சார்பும் தழுவியனவாக இருக்கும். இந்த வாழ்க்கைக்குச் சில விதிகள் உண்டு. துறவற வாழ்க் கைக்குத் தன்னலச் சார்பே இல்லாத-பிறர் நலம் கருதிச் செய்கின்ற கடமைகளே உண்டு. இங்கு விதிவிலக்குகள் மிக மிகக் குறைவு. ஏன்? இல்லையென்றே கூறலாம்.

ஆயினும், இவ்விரு வகை வாழ்க்கையின் இலட்சிய மும் கடமைகளைச் செய்தலேயாகும். துறவறம் அல்லது தவ வாழ்க்கை என்றால் கடமைகளினின்றும் விடுதலை பெறுவதல்ல. -: * .

கதே என்ற தத்துவ ஞானி கூறியதுபோல, ஞானி களின் கடமை உலகத்தைத் துறந்து ஓடி விடுவதன்று. உலகத்தோடு ஊடுருவி உண்ணின்று அதன் இயல்பறிந்து அதனுள் வீழாமல்-வீழ்பவர்களையும் காக்கப் பணிகள் செய்தலேயாகும். -

திருவள்ளுவர் துறவற இயலில் ‘தவம்’ என்ற அதிகாரத்தில், - -

தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றெல்லாம் அவம்செய்வார் ஆசையுள் பட்டு.

என்று குறிப்பிடுகின்றார். இந்தத் திருக்குறளுக்கு உரை. கண்டவர்கள், வாழ்க்கையைத் துறந்து தவம் செய்கின்ற வர்கள் தம்முடைய காரியத்தைச் செய்கிறார்கள் என்பது போலப் பொருள் காண்கிறார்கள். அங்ங்ணம் செய்யாத வர்கள் ஆசையும்பட்டும் பாவம் செய்கிறார்கள் என்றும் கறுகிறார்கள். *

இந்தத் திருக்குறளுக்கு இன்னும் சற்று ஆழமாகவிரிந்த நிலையில் பொருள் காண்பது நல்லது. 'தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/111&oldid=1276427" இலிருந்து மீள்விக்கப்பட்டது