பக்கம்:குறட்செல்வம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸113

எனினும் வள்ளுவரை விளக்க வந்தவ்ர்கள் அவர்தம் கருத்துக்கு மாறாக, பழைய பத்தாம்பசலிக் கொள்கை களையே கூறி, அவருடைய புதுமைக்குத் திரையிட்டனர்.

இடைக் காலத்தில் செல்வம், ஆதிக்கம் ஆகிய வற்றோடு இறுகப் பிணைத்துக் கொண்ட சமயக் கணக்கர் கள் செல்வம் முன்னைத் தவத்தின் பயன், வறுமை முன்னைத் தவமின்ம்ையின் பயன் என்று மயக்க உணர் வோடு கூறி வைத்தனர். அதன் காரணமாகப் பொது மக்களிடத்தும்கூட செல்வம் முன்னைப் புண்ணியத்தின் பயன் - வறுமை பாவத்தின் பயன் என்ற கருத்து வேரூன்றி நிலவியது. -

திருவள்ளுவரோ, செல்வம் உடைமை புண்ணியத்தின் பயன் அன்று என்பதை உறுதியாக கூறுகின்றார். "பொருட் செல்வம் பூரியர் கண்ணும் உள’ என்று கூறு கின்றார். செல்வம் அற்றவர்கள், முயற்சியால் செல்வம் உடையவராக முடியும் என்பதையும் ஒத்துக் கொள்ளு. கின்றார். பொருளற்றார் பூப்பர் ஒருகால்' என்று குறிப்பிடுகின்றார். -

ஆதலால் திருவள்ளுவர், செல்வம் உடைமைக்கும். இன்மைக்கும் முன்னைத் தவத்தையோ பயனைளோ காரணமாக ஒத்துக் கொள்ளவில்லை.

இலர்பலர் ஆகிய காரணம் கோற்பார் சிலர்பலர் நோலா தவர்.

என்பது திருக்குறள்.

நோன்பு முறை பலப்பல. எல்லா நோன்புகளினுள்ளும் மிகச் சிறந்தது செல்வத்தின்கண் உள்ள பற்று நீங்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/115&oldid=1276416" இலிருந்து மீள்விக்கப்பட்டது