பக்கம்:குறட்செல்வம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அவ்வழி தான்் பெற்ற செல்வத்தைப் பலருக்கும் வழங்கி அவர்தம் வறுமையை மாற்றுதல். அதனாலன்றோ ஈகையிலுங்கூ,ே

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்.

என்று கூறுகின்றார்.

புறநானூற்றிலுங்கூட, கடலுள்மாய்ந்த இளம்பெரு வழுதி, இவ்வுலகம் உள்ளதாக விளங்குவதற்குப் பல்வேறு காரணங்களை வகுத்துக் கூறிவிட்டு இறுதி முடிவாக *தமக்கென முயலா நோன்றாருள் பிறருக்கென முயலுநர் உண்மையானே' என்று கூறுகின்றார். - -

அதாவது, தனக்கென முயற்சி செய்யாது பிறருக்கென முயன்று பொருள் ஈட்டி வாழ்விப்பான் உள்ளமையானே, உலகம் இருக்கிறது-நடைபெறுகிறது-இயங்குகிறது. என்று குறிப்பிடுகின்றார். -

அகநானூற்றிலுங்கூட தலைமகள், தன் தலைவ னுக்குத் தன்மீது உள்ள, காதலைவிடப்பொருளின்மீது காதல் அதிகம். ஆதலால், பொருள்வழியிற் பிரிந்து சென்றவன் திரும்பி வருவானோ மாட்டானோ என்று

ஐயுறுகின்றாள். - - -

தலைமகனுக்குப் பொருள்மீது காதல் மிகுந்தமைக்குக் காரணம் தான்் நுகர்ந்து வாழவேண்டும் என்பது அன்று. இல்லாதவர்களுக்கு வழங்கி, அவர்களது வறுமையைத் தொலைக்கவேண்டும் என்பதேயாகும் என்றும் அவன் கூறுகின்றாள். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/116&oldid=1276417" இலிருந்து மீள்விக்கப்பட்டது