பக்கம்:குறட்செல்வம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸119

கிண்ணம் ஆடினாலும் தண்ணிரும் அலையும்; வெளியே சிந்தும், தண்ணிர் அலைந்தாலும் ஒரோ வழி கிண்ணம் ஆடும். ஒடுவதோ ஒட்டம். இந்த அமைப்பில் ஒடவும் வேண்டும். கிண்ணத்தை ஆடாமல் பாதுகாக்கவும் வேண்டும். அதனுள் இருக்கும் தண்ணிர் அலைந்து வழியாமல் பாதுகாக்கவும் வேண்டும். இத்தகையதே தவம்

செய்யும் முயற்சி. -

நாம் வாழும் உலகியல் ஆசைகளால் நிறைந்து அலைவது. இதில் உடலையும் உயிரையும் ஒருங்கே பாதுகாக்க வேண்டும். உடல் கெட்டாலும் உயிர் கெடும் -உயிர், உணர்வு கெட்டாலும் உடல் கெடும். ஆதலால், உடலை, உயிர்நிலைப் பாதுகாப்பு என்று கருதுவதில் தவறில்லை.

உடல்நிலை உயிர் உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும் நிலைக்களன். உடலியற் கூறுகளுக்கு ஏற்றவாறு, உயிர் உணர்ச்சிகள் தோன்றும் - வளரும். அதனாலன்றோ தவம் செய்வோர் உடல், ஆசைகளைத் தோற்றுவிக்கும்" நிலைக்களனாக விளங்குவதை விரும்புவதில்லை.

ஆதலால். உடலைத் தவத்தால் வருத்துவர், உடல் அழகினைக் கெடுத்துக் கொள்வர். இவ் வழித் தோன்றி யதே மழித்தலும், நீட்டலும் ஆகிய செய்முறை. ஒரோவழி நீட்டல் மட்டும் தன் இயல்பாகவே நிகழ்தல். உண்டு.

அதாவது தன்னையும், தன்னுடைய உடலையும் மறத்தலின் காரணமாகத் தோன்றுதல். எனினும் இங்கு நீளுதல் என்றின்றி நீட்டல் என்றே திருவள்ளுவர் விளை வழிப் படுத்திக் கூறி இருத்தலான் செய்முறை என்றே கொள்ளல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/121&oldid=1276421" இலிருந்து மீள்விக்கப்பட்டது