பக்கம்:குறட்செல்வம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. அருளும் பொருளும்

மானிட வாழ்க்கை அருள் நலத்தால் சிறக்கவேண்டிய ஒன்று. அருளின்பம் அன்பினால் பெறக்கூடிய ஒன்று. ஒன்றினைப் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் காட்டப் பெறுவது அன்பு. -

யாதொரு குறிக்கோளுமின்றி, காட்டப் பெறுவது அருள். இறைவன் உயிர்களிடம் காட்டுவது அருள். உயிர்கள் அருளைப் பெறுவதற்கு இறைவன்பாற் காட்டுவது அன்பு. இதனை,

".................... யாமிரப் பவை

பொன்னும் பொருளு போகமும் அல்ல அருளும் அன்பும் அறனும் மூன்றும்" என்று பரிபாடல் குறிப்பிடுகின்றது. இறைவன் உயிர் களுக்கு யாதொன்றும் எதிர்பாராமலேயே அருள் வழங்கு கின்றான். அதனாலேயே அவனுக்குப் பித்தன்' என்று பெயர் வந்தது. 'குறியொன்றும் இல்லாத கூத்து என்று திருவாசகம் பேசுகின்றது. . ...

இறை நெறி நிற்போரும், அருள் நலம் கனிந்தவர் களாக இருப்பர். தேனிலோ, உப்பிலோ ஊறிய பொருள். அவற்றின் சுவையைப் பெறுவதுபோல, இறைவனுடைய திருவருளை நினைந்து நினைந்து, அந்த இன்ப அனுபவத்தில் ஊறித் திளைத்தவர்கள் அருள் வசமாகி விடுவார்கள். அவர்களே அந்தணர்கள் - துறவிகள்சான்றோர்கள் - அருளாளர்கள். - -

இத்தகு சிறப்புடைய வாழ்க்கை எல்லாருக்கும் அமைவதன்று. பலர் அன்புடையராதல் உண்டு. மக்களி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/124&oldid=701874" இலிருந்து மீள்விக்கப்பட்டது