பக்கம்:குறட்செல்வம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸123

உத்திலும், இறைவனிடத்திலும் அன்பு காட்டுவார்கள். அருச்சனை செய்வார்கள். எனினும் இந்த அன்பு, அருள் /கருதிச் செய்யப்படுவது அன்று. அவர்களின் நோக்கம் பொருள் ஒன்றுதான்். பொருளைக் கவர்வதற்கு, திட்டமிட்டு அன்பு காட்டுவர். அதற்குப் பெயர் அன்பன்று -நடிப்பு.

கவிஞர் பட்டுக்கோட்டை சொன்னது போல, வெள்ளாட்டுக்கு இரை வைக்கும் மனிதர்களின் கருணையை ஒத்தது. பொருள் கருதி ஏற்படும் அன்பு தொடராது-நிலை பெறாது. அவர்கள், தாம் கருதியதை முடிக்கக் காலத்தை எதிர்நோக்கி நிற்பர்.

அதாவது தம்மோடு பழகுகின்றவர்களின் மறதி, சோர்வு ஆகியவைகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பர்.

காலம் வாய்க்கும்போது கருதியதை முடித்து காற்றெனக் கடுகி விடுவர். -

அத்தகையோரிடத்து ஒருபொழுதும் அன்பு இருந்த தில்லை. ஒரு வெளிமயக்கு இருந்தது. அவ்வளவுதான்். அவர்களின் நோக்கம், குறிக்கோள் பொருள் ஒன்றுதான்்.

நேர் வழியில், உழைப்பால் பொருளிட்ட முடியாத வர்கள், இந்த மறைமுக வழியைக் கையாளுவர். அவர்களிடத்து அன்பு இல்லை. அருளும் கிடைக்காது. அவம் பெருகும். இதனை, - -

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். -

- - - 锦莎 - می -웃 3 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/125&oldid=1276424" இலிருந்து மீள்விக்கப்பட்டது