பக்கம்:குறட்செல்வம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. துறவும் துய்த்தலும்

மனித குலத்தின் ஏக்கம் பெரும்பாலும் ஏன்? முழுமை யும்கூட பொருளியலின் அடிப்படையிலேயே நிகழ்கிறது. பொருள், உலக இயக்கத்தின் அச்சாணியாக அமைந்து விளங்குகின்றது. மண்ணோடு தொடர்புடைய வாழ்க்கை யில் ஈடுபட்டிருக்கும் அன்னவருக்கும் பொருள் தேவை.

அதனால் அன்றோ, ஞான நிலையில் நின்ற மாணிக்க வாசகரும். முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும் என்றார். அருள் பழுத்த நெஞ்சினராய் அவர் எடுத்த திருப்பெருந்துறைக் கோயில் திருப்பணிக்கும் பொருள் வேண்டுவதாயிற்று.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிக மிக இன்றியமை யாது வேண்டப்படுவதாகிய இப் பொருளினிடத்து மக்களுக்குப் பற்றிருத்தல் இயற்கையேயாம்-முரண் பாடன்று. - -

எனினும், பொருளை நாம் அடையும் வழிவகைகளில் நன்றும் தீதும் தோன்றுகின்றன. பிறர் பொருளை: விரும்புதலும், வழி தவறிய முறைகளில் பொருள். பெறுதலும், நேரிய வழியாகா. - . .

துறவற இயலில் திருவள்ளுவர் கள்ளாமையை வைத்திருக்கிறார். முறை வைப்பு திருவள்ளுவர் வைத்ததா, இல்லையா என்ற ஆராய்ச்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. அதன் முடிவு எப்படியாயினும், ஆகுக. திருவள்ளுவர் அதிகார முறைவைப்பைச் செய்யாமல் அவருக்குப்பின் வந்தோர் எவரேனும் செய்திருப்பாரேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/126&oldid=701876" இலிருந்து மீள்விக்கப்பட்டது