பக்கம்:குறட்செல்வம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. அறிவிற்குப் பயன்

மனித வாழ்வுக்கு அறிவு இன்றியமையாத ஒன்று, வாழ்க்கையை நல்வழிப்படுத்துவது அறிவு. குழப்பத்தி னின்றும் தெளிவு தருவது அறிவு. வாழ்வுக்கு ஆக்கம் தருவது அறிவு. வையத்துள் வாழ்வாங்கு வாழ வழி காட்டுவது அறிவு. - -

அதனாலன்றோ திருவள்ளுவர் 'அறிவுடையார் எல்லாம் உடையார்' என்று கூறினார். திருவள்ளுவர் அறிவு பெறும் முயற்சிகளை, பலபடக் கூறுகின்றார். கற்ஈ வேண்டுமென்று வற்புறுத்துகின்றார். கற்க வாய்ப்பில்லாதவர்களுக்குக் கற்றிலராயினும் கேட்க வென்று அறிவுறுத்துகின்றார்.

இத்தகு அறிவு முயற்சி மானிட சாதியில் வளர்த்து வந்திருக்கின்றது. இன்னமும் வளரும். இங்ங்னமெல்லாம் மானிடர் அறிவில் முயன்று அறிவு பெறுவது எதற்காக? ஏன்? என்ற கேள்விகள் கேட்கப்படாமலில்லை. அறிவு ஆராய்ச்சிக்காக மட்டும்தான்ா? -

அதிலும். விவாதத்திற்காகத்தான்ா? அல்லது. புலமைக் காச்சலில் சிக்கித்தவிப்பதற்காகவா? அல்லது குறைந்த நேரத்தில் எவ்வளவு அதிகப்படியான மக்களைக் கொன்று குவிக்கலாம் என்ற ஆராய்ச்சிக்காகவா? என் றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது. -

ஆம். இன்றைய உலகப்போக்கைக் கவனிக்குமிடத்து வேறு என்ன கசால்லமுடியும்? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/130&oldid=701880" இலிருந்து மீள்விக்கப்பட்டது