பக்கம்:குறட்செல்வம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. பகுத்துண்ணாமையும் கொலையே

திருக்குறள் அதிகார அமைப்புகளை உடையது. இந்த அதிகார அமைப்பினைத் திருவள்ளுவரே செய்தார் என்று கருதுவோகும் உண்டு. அங்ங்ணமின்றி இந்த அதிகாச மூறை வைப்புகள் திருவள்ளுவரால் செய்யப் பெறவில்லை என்றும், பின் வந்த உரையாசிரியர்கள் செய்தனர் என்றும் கூறுவாரும் உண்டு. -

யார் செய்தால் என்ன? அதிகார அமைப்பிற்கேற்ற வாறு திருவள்ளுவர் குறள்களைப் பாடி வைத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த அதிகார அமைப்பிலும் திறைந்த பொருளாக்க மிருக்கிறது. பயன் இருக்கிறது.

ஒரு செய்தியை ஒருதடவைக்குப் பத்து தடவை திரும்பத் திரும்ப நினைத்தாலேயே நெஞ்சகம் அந்த நெறி வில் ஈடுபடுகிறது. அதனால் ஒரு நன்னெறியினைப் பல வகைகளில் - பல கோணங்களில் பல தடவை ஆராய்ந்து உணர்தலே வாழ்க்கைக்கு ஏற்றமுறை என்பதால் அதிகார அமைப்பு சாலச் சிறந்ததேயாம். -

இங்ங்னம் தனித்தனி நெறிகளுக்கு ஏற்றவாறு திருக்குறள் அதிகாரங்கள் அமைந்துள்ளன. இத்தகைய அதிகார அமைப்பில் கொல்லாமையும் ஒன்று. உயிர்கள் உடம்பொடு தொடர்பு கொண்டு வாழ்க்கை நிகழ்த்தி தம்மை வளர்த்து உயர்த்திக் கொள்ளும் சாதனமே வாழ்வியல். இந்த வாழ்வியலுக்கு ஏற்றவாறு இசைந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/133&oldid=701883" இலிருந்து மீள்விக்கப்பட்டது