பக்கம்:குறட்செல்வம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

துள்ள உடம்பொடு உயிரிடை ஏற்பட்டுள்ள நட்பை - உறவை, பாதுகாப்பது ஒரு போறம். -

ஆதனாலன்றோ, 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்' என்றார் திருமூலர். உடம்பிற்கும் உயிருக் கும் ஏற்பட்டுள்ள உறவை நீக்குதலையே கொலை ள்ன்று: கூறுகிறோம். கொல்லப் பெறுதல் உடம்பே யாயினும் உயிர்க் கொலை என்றே கூறுகிறோம். காரணம் உடம்பு இல்வழி உயிரின் இயக்கமும் - துய்த்தலும் நுகர்தலும் வளர்ச்சியும் - இல்லாது போதலினாலே யாம். -

அதுபோலவே உயிர்தாங்கி உலவும் உடலியக்கத்துக்கு எரிபொருளாகிய உணவினை வழங்குதலை, பேரறம் என்றும் கூறுகிறோம். உணவு இல்வழி உடலியக்கம் இல்லை. உடலியங்காவழி உயிர்க்கும் இலாபமில்லை.

அதனாலேயே உடல், உயிர், உறவு இயக்கத்தைப் பாதுகாக்கின்ற உணவு, மருந்து முதலியன வழங்கும் உடன்பாட்டு அறங்களாகும். அதுபோலவே உடல்: உயிர், உறவை நீக்காமையைக் கொல்லாமை என்ற எதிர் மறை அறத்தாலும் மனித உலகம் போற்றுகிறது.

திருக்குறளில் கொல்லாமை என்று ஓர் அதிகாரம் உண்டு. கொல்லுதலின் கொடுமையை வள்ளுவர் நினைந்து நினைந்து கொதித்து, கண்டிக்கின்றார். இந்த அதிகாரத்தில் முதற் குறளாக கொல்லாமையை அறம் என்று பொதுவாக உணர்த்தி அடுத்த குறளில், -

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

என்று கொல்லாமை நெறியை வற்புறுத்துகின்றார். இக் குறளில் பலரோடு பங்கிட்டு உண்பதும், பல உயிர்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/134&oldid=1276431" இலிருந்து மீள்விக்கப்பட்டது