பக்கம்:குறட்செல்வம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்133

பேணிக் காப்பதும் பேரறம் என்று குறிப்பிடுகிறார். இந்த குறளுக்கும் கொல்லாமைக்கும் என்ன தொடர்பு?

இதனை விருந்தோம்பலில் கூறக் கூடாதா? அல்லது ஈதலில்தான்் கூறக் கூடாதா? இங்ங்னம் அங்கெல்லங் கூறாமல் கொல்லாமை அதிகாரத்தில் பகுத்துண்டு பல்லுயிரோம்பும் பாங்கான நெறியைக் கூறியது ஏன்? கொல்லுதலும் குற்றமே. அதைவிடப் பெரிய கொலைக் குற்றம் உண்டி முதலியன வழங்கிக் காப்பாற்றாமல் சாக விடுவதும் ஆகும் என்பதனை உணர்த்த இங்கு கூறினார்.

கூடி வாழும் மனித சமுதாயத்தில் சமுதாயத்தின் ஒரு உறுப்பினராக விளங்கும் மனிதனுக்கு சமுதாய ரீதியாகக் கடமைகளும் உண்டு. உரிமைகளும் உண்டு. சமுதாயத் தில் ஒரு உறுப்பினனாகப் பிறந்த மனிதனைச் சோறு இன்றி சாகவிடும் சமுதாயம் கடமை உணர்வு இல்லாத சமுதாயமாகும். அதையே ஒரு கொலைகார சமுதாயம் என்று கூறினாலும் பொருந்தும். -

கத்தி எடுத்துக் கொன்றால் மட்டுமே கொலை என்ப தன்று. பெற்ற செல்வத்தைப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து பலரையும் பேணி வளர்க்காமல், சோறிட்டு மருந்து முதலியன வழங்கி பலரையும் பேணி வளர்த்துப் பாதுகாக்காமல் சாகடித்தலும் கொலைக் குற்றமே என்ப தனை உணர்த்தவே, இந்தக் குறள் கொல்லாமை அதிகா ரத்தில் அமைந்திருக்கிறது. . .

இந்த அடிப்படையில் இன்று நம்முடைய நாட்டினை நோக்கிக் கொலைகாரர்கள் மிகுதியும் உள்ளனரோ என்ற

வினா எழுந்தால் மறுப்பார் யா?

o o o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/135&oldid=1276435" இலிருந்து மீள்விக்கப்பட்டது