பக்கம்:குறட்செல்வம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. இறப்பும் பிறப்பும்

- மனிதன் ஓயாது உழைக்கும் இயல்பினன். பகல் எல்லாம் உழைக்கின்றான். உழைப்பில் முழு ஆர்வத் துடன், ஈடுபட்டால் ஒரளவே மனிதசக்தி செலவாகும். சூழ்நிலையின் காரணமாக விருப்பமின்றி உழைப்பில் ஈடுபட்டால் நிறைய மனித சக்திவீணாகிறது. உழைப்பில் இழந்த மனித சக்தியை ஈடுசெய்ய மனிதன் உறங்கு கின்றான். -

உறக்கம், அதியற்புதமான மருந்து. உழைப்பில் இழந்த சக்தியை ஈட்டித் தருவதுடன் சோர்வை அகற்றி சுறுசுறுப்பைத் தருகிறது. மனிதன் உறங்கிய பிறகு எழுச்சியுடன் எழுந்திருக்கின்றான். இது இந்தப் பருவுடலைப் பொறுத்த நிகழ்ச்சி முறை.

  • அதுபோலத்தான்் ஆன்மாவும் அதன் துண்ணுடலும் இப்பிறப்பில் பல் வேறு வகையான வேதனைகளுக்கு ஆளாகிறது. அதில் உயிருக்கு அலுப்பும் சோர்வும் ஏற்படுகிறது. அதனாலேயே பிறப்மைத் துன்பமென வர்ணிக்கின்றனர். - 2- -

இந்த ஆன்மநுண்ணுடல் சம்பந்தமான துன்பங்கள் நீங்கவே, மனிதனுக்கு இறப்பு வருகிறது. சிந்தனையிலும் உணர்விலும் கிழடுதட்டித் துன்பத்தில் உழன்று அழுது கொண்டே சாகும் மனிதன் திரும்பவும் கிழடு இல்லாத - இளமை நலன்கள் செறிந்த உடலுடன் தன்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/136&oldid=701886" இலிருந்து மீள்விக்கப்பட்டது