பக்கம்:குறட்செல்வம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸139

தினைந்து அதற்கேற்ப ஒழுக வேண்டுமென்ற விழுமிய விருப்பத்தைப் பெற்று அதை நிலைநிறுத்திக் கொள்ள, உலகின் சிறுவட்டமாகிய நான்கு திசைகளைத் திருப்பிச் சுற்றுதல் ஒரு பாடம்; ஒரு பயிற்சி முறை. முன்னையது உடற் பயிற்சி; பின்னையது உணர்வுப் பயிற்சி.

இங்ங்ணம் காரணங்களை அறிந்து நெறி முறையில் நின்று வாழ்தல் தீமையினின்றும் விடுதலை தரும். துன்பமும் மாறும். தீமைக்கெல்லாம் தீமை தன்னலமே பாம். தனது நலமின்றி மனிதன் வாழ முடியுமா? தியாய மான வினா. நலம் வேறு. தன்னலம் வேறு. எல்லாரும் நலமுடையராகவே வாழவேண்டும். இஃதே இயற்கை. இதுவே பொதுவிதி. இதுவே மனித உலகத்தின் ஒழுக்கமும்கூட. - -

நலம் இருவகையன. தான்் படைத்துக் கொள்ளும் இன்ப நலன், பிறர் படைத்து வழங்கும் இன்ப நலன். தான்் படைத்துக்கொள்ளும் நலன்களாவன: அறிவு, அன்பு, ஆள்வினைத் திறன் முதலியனவாம். பிறர் வழங்கும் நலன்களாவன, தான்் பேணப்படுதலும் போற்றப்படுதலுமாம். தன்னைத்தான்ே பேனிக் கொள்வதைவிடப் பேணப்படல் சிறப்பாகும்.

தன்னலம் என்பது பிறருக்கு நலமின்மை விளைத்துத் தனக்கு வருகிற நலனே தன்னலம் என்று கூறப்பெறும். தன்னிடமுள்ள தன்னலச் சார்பினையறிந்து அச்சார்பு கெடவும் பிறர் நலம் பேணும் சார்பு பற்றி நின்று ஒழுகவும் எல்லோரும் முயன்றால் தனிமையிலும் துன்பமில்லை, பொதுவிலும் துன்பமில்லை. எங்கும் இன்பம், எல்லோ ருக்கும் இன்பம், எப்பொழுதும் இன்பம். இதனை,

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய்.

என்று திருக்குறள் கூறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/141&oldid=1276478" இலிருந்து மீள்விக்கப்பட்டது