பக்கம்:குறட்செல்வம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. இருவேறு உலகத்து இயற்கை

இந்த உலகில் அறிவுடையவர்கள் பலர் ஏழைகளாக இருக்கிறார்கள். அறிவில்லாதவர்கள் சிலர் செல்வந்தர் களாக இருக்கிறார்கள். இஃது உலகியலின் நியதி ஆகாது; நீதியும் ஆகாது. முறைகேடான ஓர் அமைப்பை -முறையை நியாயத் தன்மைப்படுத்துவது அநீதியே ஆகும். - - -

வாழும் மனித உலகிற்கு அறம்பேசவந்த வள்ளுவர் மனித உலகத்தின் நலனையே நியாயமெனக் கருதுகிறார்: நீதி என்று கருதுகிறார். வழக்கில் பொய்மையாக இருந்தாலும் மனித உலகம் தீதற்ற நன்மையே பெறுமானால் அதுவே முறையென உரை கண்டவர் வள்ளுவர். வள்ளுவம் மனித குலத்தின் நலனையே மையம் கொண்டு கால்பரவி நிற்கிறது. -

இன்று அறிவுடையோர் ஏழையாக யிருக்கலாம். எத்தனையோ எழுத்தாளர்கள்-புலமை நலம் பெற்ற வர்கள் பதிப்பாளர்களின் உடும்புப் பிடியில் சிக்கி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பதிப்பாளர் சம்பாதிப்பது பல ஆயிரங்கள். படித்தவர் சம்பாதிப்பது சில நூறுகள். இந்தக் கொடுமைக்கு இன்னும் விடுதலை வரவில்லை.

ஆனால், அறிவுடையோர் எல்லாரும் இப்படி இருக் கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. எழுத்தாளரும் பதிப்பாளரும் ஒருவராகவே விளங்கும் புலமைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/142&oldid=701892" இலிருந்து மீள்விக்கப்பட்டது