பக்கம்:குறட்செல்வம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸141

சான்றோர், இன்று இல்லையா? டாக்டர் மு.வ. அவர்கள்

இல்லையா?

அறிவு என்றால் ஒரு காலத்தில் இலக்கியப் புலமை மட்டுமே என்ற கருத்து இருந்தது. அதுபோலவே, செல்வம் என்றால் நிலவுடமை என்ற கருத்தேயிருந்தது. நிலவுடைமை பரம்பரையானது. நிலவுடைமைச் செல்வ முடையோர் அறிவாற்றலோ தொழில் நுட்பமோ, தொழில் திறனோ உடையவர்களாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லாமலிருந்தது. - *.

முதற்காரணம் பரம்பரை. அடுத்த காரணம் அவர்கள் உழுவோரல்லர். வேளாண்மைக் கல்வியும் திறனும் உடையோரைக்கூட நில உடைமை முறை வற்றச் சிதறடித்திருக்கிறது. அந்த யுகத்திற்கு வேண்டுமானால் பழைய முறை பொருந்தும். *

அறிவு என்றால் ஒருதுறை அறிவு முழு அறிவாக மூடியாது. அதிலும் உடல் தேவைக்குரிய பொருள்களை ஈட்டத்தெரியாத அறிவு முழுத் தன்மை உடையதாக ஆக முடியாது. நம்முடைய மொழியும் நம்முடைய இனமும் மற்ற நாடுகளைப்போல மேலோங்கி வளராததற்கே காரணம் அறிவும் உழைப்பும் இணைந்து செயல்படாததே ஆகும்.

கருத்துக்கள் தோன்றியிருந்தாலும் வாழ்க்கையில் மாறுதல் இல்லை. இந்த முறைகெட்ட மரபை-அநீதியை -நெறியல்லாத நெறியை வள்ளுவரும் நியாயப்படுத்தி இருக்கிறாரென்று கூறுவது வள்ளுவத்திற்குப் பெருமை அனறு. - . . . ." -

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/143&oldid=1276479" இலிருந்து மீள்விக்கப்பட்டது