பக்கம்:குறட்செல்வம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸143

ஆதலால் தெள்ளிய அறிவும் கண்டோரால் விரும்பப்படும் எளிமையும் ஏற்றப் பண்பும் ஒருசேர உடையவராக வாழ்தல் அரிது.

மாணிக்கவாசகர் கடவுளைத் திரு” என்றே அழைக்கிறார். "திருவே, என் செல்வமே' என்பது மணிமொழி. இறைவனை சிந்தித்தலுக்கும் அவன்றன் திருவருளைப் பெறுதலுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை.

தெள்ளிய அறிவுடையோர் இறைவனைப் பற்றியே ஆராய்ந்தாலும்கூட இறைவனை ஆராய்கிறார்களே தவிர அனுபவிப்பதில்லை. எந்த ஒன்றையும் எப்பொழுதும் ஆராய்ந்து கொண்டேயிருப்பவர்களுக்கு அவர்கள் ஆராயும் பொருளில் ஒன்றி உடனாகும் வாய்ப்புக் கிடைக்காது. இறைவனும் அவனது இன்பமும் ஆய்வுக் கூடத்திற்கு

தெள்ளிய அறிவுடையோர் ஆராய்கிறார்கள்! ஆராய் கிறார்கள்!! ஆனால், ஐயகோ, அவர்களுக்கு அனுபவம் இல்லை! இதனைத்தான்ே கற்றதனால் ஆயபயனென் கொல்?’ என்று வள்ளுவர் வினவுகிறார். மாணிக்க வாசகரும் கற்றாரையான் வேண்டேன்’ என்று ஒதுக்கு கிறார். திருஞானசம்பந்தரும் தெளிவினுள் சிவமாகி" என்று குறிப்பிட்டுத் தெளிவு சிவமாதலிலேயே பயன் கூட்டுகிறது என்று அருளிச் செய்துள்ளார்.

ஆதலால், 'திரு வேறு தெள்ளியராதலும் வேறு' என்ற குறளுக்குக் கண்டோரால் விரும்பப்படும் தன்மை உடையாராதலும், தெள்ளிய அறிவுடையாராதலும் உலகியற்கையில் வேறுபட்டன என்றும், இறைவன் திருவருளைச் சிந்தித்துப் பெற்று அனுபவித்தலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/145&oldid=1276481" இலிருந்து மீள்விக்கப்பட்டது