பக்கம்:குறட்செல்வம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

களை, கற்றுக் கொள்வதாகும். சிறப்புக் கல்வி என்பது தன் தகுதியினை மேலும் உயர்த்திக் கொள்ள கற்பதாகும்.

ஒருவர்க்கு உடலில் நலமில்லையானால் மருத்து.ை ரிடம் உடலைக் காட்டிச் சோதனை செய்தல் வேண்டும். மருத்துவர் உடலைச் சோதனை செய்து நோயுற்ற உடம்பினில் இன்னின்ன உயிர்ச்சத்து இல்லையென்று குறிப்பிடுவர். இல்லாத உயிர்ச்சத்தைப் பெறக்கூடிய உணவை-மருந்தைத் தேடி உண்டு, இன்மையை ஈடு செய்து கொள்வது இயல்பு.

உடலைப் போலவே நம்முடைய உயிரியலில் சில் தகுதிக் குறைபாடுகள் இயல்பிலேயே உண்டு. அந்தித் தகுதிக் குறைபாடுகள் என்ன என்பதை நாமே நம்முடைய நேற்றைய வாழ்க்கையின் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். .

அல்லது நமது வாழ்க்கையில் நெருங்கிய தொடர் புடைய பெற்றோர். ஆசிரியர், நண்பர் ஆகியோர் மூலமாவது எந்த வகையில் நாம் தகுதிக் குறைபாடு உடையோர் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். -

இங்ங்னம் தெரிந்துகொண்ட பிறகு நம்முடைய உயிர்த் தகுதிக் குறைபாட்டை நீக்கி நிறைநலத்தை வழங்கக்கூடிய இலக்கியங்களை-கருத்துக்களைக் கற்றுத் தகுதியுடையவராக ஆக்கிக்கொள்ள வேண்டும். இதனை,

கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் கிற்க அதற்குத் தக.

என்ற குறளால் அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/148&oldid=1276483" இலிருந்து மீள்விக்கப்பட்டது