பக்கம்:குறட்செல்வம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸157

பட்டியல் போட்டுக் காண்பிக்கின்றன. அதற்கு மாறாக மக்கள் மன்றத்தின் நிறைநல வளர்ச்சி குறித்து மதிப்பிடுவதில்லை.

பொதுவாக இன்று ஒரு அரசு மிக மிகச் சாதாரண மான காவல் உத்தியோகத்தையே வகிக்கிறது. ஆனால் அரசினுடைய பொறுப்போ தன் குடிமகனுடைய அறிவைத் தொட்டுத் தோண்டி வளர்ப்பது, ஆள்வினையாற்றலை வளர்ப்பது: ஒழுக்க நெறியில் நிறுத்துவது.

என்னுடைய தேவைகளை நான்பெற என்னை முறையான வழியில் வழி நடத்துவது. பெற வேண்டுவன வற்றைப் பெற்று வாழத் துணை நின்று பாதுகாப்பது. இவ்வளவும் அரசின் பொறுப்பு.

இத்தகைய எந்தவொரு பொறுப்பினின்றும் அரசு நழுவினால் மக்கள் மன்றத்தில் குற்றம் மலியும். குற்றத்தைக் கூறிப் பயனில்லை. அரசு குற்றமுடைய தாக இருந்து கொண்டு மக்களுக்குத் தண்டனை வழங்குவது அறநெறியும் அன்று.

அதனாலேயே தன் குற்றம் கண்டு தன்னுயிர் தந்தனன் பாண்டியன் நெடுஞ்செழியன். கோவலனிடத் தில் குற்றமில்லை. ல்ாண்டியனிடத்திலிருந்த குற்றம் கோவலனிடத்தில் குற்றத்தை உண்டாக்கியது என்பதை யும் அடியிற்கண்ட குறளையும் இணைத்து நோக்கினால் தமிழர் அரசியலின் விழுமிய சிறப்புக்கள் விளங்கும்.

தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின் என்குற்றம் ஆகும் இறைக்கு. என்பது திருக்குறள்.

ο ο ο

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/159&oldid=1276491" இலிருந்து மீள்விக்கப்பட்டது