பக்கம்:குறட்செல்வம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. ஊழா? முயற்சியா?

"ஊழ் சர்வ சக்தி படைத்தது; அதை எதிர்த்து மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது; மனித ஆற்றலை விட ஊழின் ஆற்றலே வலிமை படைத்தது’ என்றெல்லாம் கருத்துக்கள் நிலவிய காலத்தில் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

பொதுவாக நம்முடைய மக்களிடத்தே இன்றுவரை விவாதத்திற்குரியதாக இருப்பது ஊழ் பெரியதா? உலையா முயற்சி பெரிதா? என்பதுதான்். ஊழ் வலிமை யானது என்ற கருத்தை வலியுறுத்துகிறவர்கள் கீழ்க்கண்ட சான்றுகளைக் காட்டுவார்கள். -

கல்பொருங் திரங்கு மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியிற் றெளிந்தனம்.' -புறம்

ஆற்று வெள்ளத்தில் போகும் படகு, வெள்ளத் துடனேயே அடித்துச் செல்லப்படும் என்பது உவமை. படகு ஆற்று வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படுதலில் என்ன வியப்பு? அது சடப் பொருள்தான்ே? படகுக்கு ஏது பகுத்தறிவு? படகுக்கு ஏது சிந்தனை? ஏது அறிவு? ஏது செயல் திறன்? -

மனிதனோ சிந்திக்கும் ஆற்றல் பெற்றவன். அறிவும் செயல் திறனும் உடையவன். இவன் வெள்ளம் போகிற போக்கிலேயே இழுத்துச் செல்லப் பெறுவானானால் மதியிலி - நீந்தத் தெரியாதவன் - ஆற்றல் இல்லாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/160&oldid=701910" இலிருந்து மீள்விக்கப்பட்டது