பக்கம்:குறட்செல்வம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸159

சோம்பேறி என்றுதான்் கொள்ளவேண்டும். சக்தி படைத்த - மதியுடைய - நீந்தத் தெரிந்த மனிதன் படகில்

இருந்தால் ஆற்றுப்போக்கை எதிர்த்து அல்லவா செல்லுவான்?

திருவள்ளுவர் பெருமகனாரின் நூலிலுள்ள 'ஊழிற் பெருவலி யாவுள?’ என்ற வினாவை எழுப்புவர் சிலர். ஆனாலும் அவர் எடுத்துக்கொண்ட ஒரு பொருளை எப்படி முடிக்கிறார்? கருத்துக்கு எப்படி ஊட்டங் கொடுக்கிறார் என்றுதான்் பார்க்கவேண்டும். அந்தக் குறளையே முடிக்கும்பொழுது ஊழ் முந்துறும்’ என்கிறார்.

ஊழ், உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் உன் லுடைய முயற்சியை முந்திக்கொண்டு வந்து நிற்கும் என்கிறார். எனினும் ஊழ் வெற்றி பெற்றதாக அவர் சொல்லவில்லை.

நீண்ட ஒட்டப் பந்தயத்தில் முதற் சுற்றில் சிலர் முந்தி ஓடி வருவதுண்டு. ஆனாலும் முதற் சுற்றில் முந்தி ஒடியவர்களே இறுதியிலும் வெற்றிபெற்று விடுகிறார் களா? இல்லையே! முதலில் பிந்தி ஓடியவர்கள் போகப் போக தமது ஆற்றலைப் பெருக்கி முந்தி ஓடியவர்களைப் பின்தள்ளி வெற்றிபெற்று விடுவதுண்டு.

அதுபோலவே 'ஊழ் முந்தினாலும், அது மனித னுடைய குறைவற்ற முயற்சியால் பின்தள்ளப்படுவதற்கு உரியது-பின்தள்ள முடியும். அந்த ஆற்றலுக்கே முயற்சி என்று பெயர். முயற்சியைப் பற்றி வள்ளுவர் பேசும்

போது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/161&oldid=1276492" இலிருந்து மீள்விக்கப்பட்டது