பக்கம்:குறட்செல்வம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸19

யோர் கூலி கொடுத்துத் தூக்கச் செய்து போகிறார்கள். இஃதெப்படி அறமாகும்?

செல்வமுடைமையும் அறமன்று. பொருட் செல்வம் பூரியர் கண்ணும் உள' என்று பின்னே வ்ள்ளுவர் பேசு கிறார். அதனால், சிவிகை ஊர்தல்-தாங்குதல் என்ற வாழ்க்கை வேறுபாடுகள் உலகியலாலும் செல்வ வேறுபாட்டாலும் தோன்றுவதே தவிர, அறத்தின்பாற் பட்டதன்று என்பதே திருவள்ளுவரின் தெளிந்த கருத்து.

ஒரோ வழி அறத்தின் காரணமாகவும் சிவிகை ஊர்தலும் உண்டு. சிவிகை தாங்குதலும் உண்டு. அப்பொழுது சிவிகை ஊர்கிறவர்களும் சிவிகை தாங்குகிறவர்களும் ஒத்த உணர்வின்ராய்- ஒத்த தகுதியுடையவராய் இருப்பர்.

அங்கு ஒருவருக்கொருவர் பெருமைப்படுத்திக் கொள்ளும் பண்பாட்டின் வழியிலேயே, சிவிகை தாங்குதல் நிகழ்கிறது. அங்கு சிவிகை தாங்குதலும் அறமேயாம்.

இக் காட்சியைத் திருஞான சம்பந்தர் ஊர்ந்த சிவிகை யைத் திருநாவுக்கரசர் தாங்கியதிலிருந்து நன்கு உணர லாம். - - - ... x -

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தான்ோடு ஊர்ந்தான்் இடை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/21&oldid=1276215" இலிருந்து மீள்விக்கப்பட்டது