பக்கம்:குறட்செல்வம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மனையறத்தார் கடமை


வாழ்க்கை குறிக்கோள் உடையது. தோழமை கொள்வதும் துணை நிற்பதும் துயர் துடைப்பதும் வாழ்க்கையின் இன்றியமையாத பணிகள். இப்பணி களற்ற வாழ்க்கை வாழ்க்கையாகாது. மனிதன் ஊண் உண்பதும் காதற் பெண்டுடன் களித்து மகிழ்ந்து மனையில் வாழ்வதும், குறிக்கோள் பாதையில் இனிதே நடைபோடத்தான்்.

இன்று பலர் உண்பதே தொழிலாகக் கொண்டு இருக்கின்றனர்; பெண்ணின்பமே இன்பமெனக் கருது கின்றனர். இவர்கள் உருவத்தால் மனிதர்கள்: உணர்ச்சி. யில் விலங்குகள். வனத்தில் வாழ்வதற்குத் தப்பிப்போய் நாட்டில் நடமாடுகின்றனர்.

வள்ளுவம் வாழ்வாங்கு வாழும் நெறியுணர்த்தும் நூல். வாழும் மனிதனுக்குத் துறைதோறும் கடமைகள் உண்டு. சில துறைகளைத் திருவள்ளுவரே எடுத்து விளக்குகின்றார், உழைப்பையே உயர் துணையாகக் கொண்டு பொருள் பல செய்து குவித்து, பகுத்துண்டு பல்லுயிரோம்பி வாழ்தல், வாழ்வாங்கு வாழும் நெறி யாகும். இங்ங்னம் பொது வகையாக மட்டும் கூறாமல் பகுதி பிரித்தும் கூறுகிறார்.

. துறந்தார்க்கும் துவ்வா. தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.

துறந்தார் என்பவர் யார்? கனிந்த கணியென உள்ளத்தால் பழுத்து யாதொரு பற்றுமின்றிப் புகழ் இதழ் களில் நாட்டமின்றிப் பழுத்த மனத்தடியாராக வாழ்பவர் ಷGar இல் றவிகள். அவர்கள் உள்ளம் கருணையின் ஊдода:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/22&oldid=1276224" இலிருந்து மீள்விக்கப்பட்டது