பக்கம்:குறட்செல்வம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸21

தாடெல்லாம் வாழக் கருதும் பேருள்ளம். அவர்களைப் பாதுகாப்பது நாட்டின் பாதுகாப்பாகும்; மனையறத்தின் மங்களத்திற்கு அரணாகும். w х

துறந்தாரோ உரிமையுடையதென யாதொன்றையும் பேற்றிலர்; ஒடும் பொன்னும் ஒக்க நோக்கி வாழும் சீலமுடையார்; கந்தை ஆடையையும் மிகையெனக் கருது வோர். ஆதலால் அவர்களுக்காக அவர்கள் நலங்கருதி, மனையறம் நிகழ்த்துவோர் பணி செய்தல் பாங்காகும். இந்தத் திருக்குறள் நெறியையே திருத்தொண்டர் புராணம் விளக்கி அருளுகிறது. -

அடுத்துப் பேணத் தக்கவர் "துவ்வாதவர்' திருவள்ளுவர் துவ்வாதவர் என்ற ஓரினத்தைப் பேணுதற் குரியவராக விளக்கி அறம் வகுத்தல் மிக உயர்ந்த பெரு நெறியாகும். உயிர்களின் இயற்கை துய்த்தலாகும்.

உயிர்கள் துய்ப்பனவற்றைத் துய்த்து வேட்கை தணிந்துழியே நலமுறுகின்றன. இதுவே சமயத்தின் அடிப்படை நியதி. . .

துய்த்து அனுபவிக்கப் பிறந்த உயிர்களுக்குத் துய்ப்பன வழங்காமல் ஏழ்மையில் அவலமுறச் சேய்துவிட்டுத் துய்க்கும் நெறிக்கும் அப்பாற்பட்ட இறைவனின் முன்னே துய்த்தற்குரிய பொருள்களைப் படைப்பது பேதைமையேயாம். அதுமட்டுமின்றி ஏமாற்ற மூம் ஆகும்.

இறைவன், துய்த் தற்குரிய பொருள்களைப் படைத்துக் காப்பது, உயிர்கள் துய்த்து மகிழ்ந்து, உய்தி பெறுதற் காகவே யாம். அங்ஙனம் துய்த்தற்குரிய புலன்களை பெற்றிருந்தும் துய்த்தற்குரிய வாயில்களாகிய பொறி களைப் பெற்றிருந்தும் இறைவன் கருணையால் துய்த்தற்குரிய பொருள்களைப் பெற்றிருந்தும், பலர் துய்க்கும் வழியின்றித் தொல்லைப்படுகிறார்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/23&oldid=1276222" இலிருந்து மீள்விக்கப்பட்டது