பக்கம்:குறட்செல்வம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தன்னலச் செறிவின் காரணமாகவும், துய்த்தல் துறத்தலுக்கு வாயில் என்ற அறிவின்மையினாலும், இறைநெறி,பல்லுயிரையும் பேணிப்பாதுகாக்கும் நெறியே என்ற உணர்வின்மையினாலும் இந்த அவலங்கள் ஏற்படுகின்றன. மனையறத்தைப் பெயரளவின்றி அட்ன்மையிலேயே அறமாக நிகழ்த்த வேண்டுமாயின் துவ்வாதவரைப் பேணவேண்டும். *

அடுத்து, பேணத்தக்கவராக வருபவர் இறந்தாராவர். அதாவது நம்முடைய தமிழ்மரப்புப்படி, அவாவும் வேட்கை புத் தணிந்தபோதுதான்், உயிர் நிலையான நிலையை எய்துகின்றது. அதுவரையில் பிறப்பு இறப்புச் சுழலில் இத்திச் சுழல்கிறது. சில சமயங்களில் பருவுடலோடு இந்த உலகிடை நடமாடித் துய்த்து மகிழும்; சில பொழுது பருவுடலினின்று பிரிந்து இறந்து பட்டதாகக் கருதப் பட்டாலும் நுண்ணுடலோடு உலவிப் பொறிகளால் துய்க்காமல் புலன்களால் மட்டும் துய்க்கும்.

அங்ஙனம் பருவுடல் இறந்துபட்டு நுண்ணுடலில் திரியும் இறந்தார்க்கும், இல்வாழ்வோர் துணையாக நின்று, நீத்தார் நினைவு நாட்கள் கொண்டாடுவதன் மூலம் அவர்களுடைய துய்ப்புக்குத் துணை நின்று அவ்வழி வேட்கை தணியச் செய்யவேண்டும். -

- இங்ஙனம் நுண்ணுடலில், வாழ்வோர் உலகியலில் இறந்து பட்டாரென்று கருதப்பெற்றாலும், உண்மையில் இறந்தவர்களாகார். இவர்கள் நிலை பரிதாபகரமானது. - துய்ப்பார்வத்தைத் துரண்டும் புலன்கள் ச்ெத்தபாடில்ல்ை.

ஆனால் துய்ப்பனவற்றைத் தேடிப் பெறுதற்குரிய கருவிகளாகி, பொறிகளோ இல்லை. புலன்கள் எண்னும் கற்பனை செய்யும்; ஆசைப்படும். ஆனால் தாமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/24&oldid=1276230" இலிருந்து மீள்விக்கப்பட்டது