பக்கம்:குறட்செல்வம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸23

அடைதற்குரிய ஆற்றல் அவர்களுக்கில்லை. ஆதலால், அந்த உயிர்களின் துய்ப்பு நலன்களைப் பாதுகாப்பது இல்வாழ்வோரின் கடமையாகிறது.

"இறந்தார்' என்ற சொல்லில் உள்ள றகரத்தை இடையின ரகரமாகக் கொண்டாலும் யாப்பில் பிழை யில்லை. அப்படி இரந்தார்' என்று கொண்டால் யாதொரு பற்றுக்கோடுமின்றி-உடலில் உறுப்புக் குறை யினராக-உடற் தொழிற்பாடு செய்ய முடியாமல் பிறரை நோக்கி வாழவேண்டிய நிலையில் இரந்து நிற்பாரைக் குறிக்கும்.

இன்றைய உலகில் இரப்பாரினம் கண்டுகொள்ள முடியாமல் குழம்பிக் கிடக்கிறது. யாதோர் உடற் குறையு மின்றி உழைப்பிற்கேற்ற முழுத் தகுதியுடையதாய் உடல் விளக்கமுற இருந்தும் கருவி கரணங்கள் யாதொரு பிழையு மின்றி இயங்கினாலும் உழைக்கும். சுபாவம் இன்மையின் காரணமாக இரந்து வாழ்கின்ற 'சுகவாழ்வினர் பலரைச் சந்திக்கிறோம்.

மனத்தினால் துறவாது, துறவை, வாழ்க்கையின் வாயிலாகக் கருதி மேற்கொண்டோர் பலரும் இரவலர் களாக, ஆங்காங்கு திரிவதைப் பார்க்கின்றோம். துறவி இரக்க மாட்டான். - -

துறவி, இரவலன் ஆதல், இடும்பைக்கு வழிவகுக்கும். உடல் கட்டுக்கோப்புடையவன் அந்தப் பெயரைச் சொல்லி அழைக்காமல் ஏய்த்து வாழ்ந்தாலும் இரத்தலோடொக்கும் ஆனால் இத்தகையோரை இரவலர் என்று ஏற்றுக்கொள்ள முடியாது.

. நல்லுழின்மையின் காரணத்தாலோ, அல்லது இயற்கையின் கொடுமையினாலோ உடற்குறையுடையரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/25&oldid=1276227" இலிருந்து மீள்விக்கப்பட்டது