பக்கம்:குறட்செல்வம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸27

"தொழுது எழுவாள்' என்ற சொல்முறை வைப்பு இந்தப் பொருளையே சிறப்பாகத் தருகிறது. உடல் வணக்கம் என்றே பொருள் கொள்வதாயின் எழுந்து தொழுதல்’’ என்று முறைவைப்பு இருக்க வேண்டும்.

அடுத்து, உணர்வில் கலந்து ஒன்றான பெண்ணுக்கு கணவனின் இயல்பு, குறை, நிறை, தேவை அன்ைத்தும் தெரியும். அவனுக்கு எது, எப்பொழுது தேவையோ, அப்பொழுது, அவ்வண்ணம் அவள் துணை செய்வாள்.

வேளாண்மை செய்த ஒருவன் விரும்பியபொழுது மழை பெய்தால் அம் மழையினால் அவனடைந்த வேளாண்மைப் பொருள் பெருக்கமும், மன மகிழ்வும் அளவிடற்கரியன. அதுபோலவே, உற்ற இடத்து உரியவாறு துணை செய்யும் வாழ்க்கைத் துணைவியின் மூலம் கணவன் காரியங்களின் சாதனையைப் பெது கிறான்; மகிழ்வு கலந்த இன்பமும் பெருகிறான்; புகழும் பீடு நடையும் பெறுகிறான். வேண்டிய பொழுது பெய்யும் மழைபோல வேண்டியபொழுது உதவி செய்வாள். அதிலும் நுட்பமிருக்கிறது. வேண்டாத பொழுது மழை பெய்யக்கூடாது. அதுபோலவே கணவன் வேண்டாதபொழுதும் மேவித் துணை செய்யக்கூடாது. அங்ங்ண்ம் செய்யப்புகின் அடக்கமின்மையாகவும், தன் முனைப்பாகவும் கருதப்பெற்று உறவு கெடும்.

ஆதலால் பெய்யெனப் பெய்யும் மழை யென்ற சொற்றொடர், சிந்தனைக்கு இன்பம் தருவது. வேண்டிக பொழுது காலந் தாழ்த்தாமலும் உடனடியாகப் பெய்யும் மழையும் சிறப்புக்குரியது. அதுபோலவே கணவனுக்கு வேண்டியபொழுது உடனடியாகத் துணை செய்யாமல் "'இதோ வருகிறேன்' என்றோ இப்பொழுதென்ன அவசரம்?' என்றோ நீட்டித்துக் காலந்தாழ்த்தாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/29&oldid=1276239" இலிருந்து மீள்விக்கப்பட்டது